125 ஆவது பிறந்த நாள் நினைவாக (2)
சர். ஏ.டி. பன்னீர்செல்வம் சென்ற விமானம் கடலில் வீழ்ந்தது! 125 ஆவது பிறந்த நாள் நினைவாக சர். ஏ.டி. பன்னீர் செல்வம் குறித்த வாழ்க்கைக் குறிப்பின் கடந்த வாரத் தொடர்ச்சி. திருவையாறு கல்லூரியில் சமஸ்கிருதம் மட்டுமே கற்றுத் தரப்பட்டதை மாற்றி தமிழ்க் கற்பிக்கவும் ஏற்பாடு செய்த சர். செல்வத்துக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. எதிர்ப்பு எதனையும் சர்.செல்வம் பொருட் படுத்தவில்லை. விடுதியிலும் தமிழ் படிப்பவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. மேலும் பார்ப்பனரல்லாத பிள்ளைகள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவதற்கு வழி வகைகள் செய்யப் பட்டன. ‘சமஸ்கிருத காலேஜ்’ எனும் பெயர் ‘ராஜாஸ் காலேஜ்‘ என்றும், ‘அரசர் கல்லூரி’ என்றும் அழைக்கப்படலாயிற்று. அதாவது பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள ராஜா சத்திரங்களில் பார்ப்பனர்களுக்கு மட்டும் உணவளிக்கப்பட்டு வந்தது. அதனை மாற்றி சர். செல்வம் எல்லா வகுப்பினருக்கும் உணவளிக்கும்படி ஏற்பாடு செய்தார். சர். செல்வம், மாவட்டக் கழகக் கல்வித் துறையை நன்றாக முடுக்கி...