பெரியார் இயக்கத்தின் வெற்றி சாதி-மத மறுப்பு திருமணங்கள் அதிகரிப்பு
தமிழ்நாட்டில் சாதி-மத மறுப்புத் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. அகமண முறையில் இறுக்கமாக நிலவி வரும் சாதி அமைப்பு, மெல்ல மெல்ல உடைபடத் தொடங்கிவிட்டதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பெரியார் இயக்கம் தொடங்கி வைத்த சாதி எதிர்ப்பு மற்றும் கல்வி உரிமைப் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாகவே இதை கருத வேண்டும். நகர்ப்புறத்தில் குறிப்பாக சென்னையில் சாதி-மத மறுப்பு திருமணங்கள் அதிகரித்துள்ளன. வேகமாக மாறி வரும் இந்த சமூகப் போக்கு சமூக செயல்பாட்டாளர்களிடையே வியப்பையும் மகிழ்ச்சியையும் உருவாக்கி யிருக்கிறது என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (பிப்.14) எழுதியுள்ளது. அந்நாளேடு வெளியிட்டுள்ள செய்தி: 2010-2011 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 77,000 திருமணங்கள் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருமணப் பதிவு அலுவலக தகவல் தெரிவிக்கிறது. இதில் சிறப்புதிருமணப் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் 7,601. மதம் கடந்து நடக்கும் திருமணங்களே இந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. மொத்த திருமணப்...