‘தமிழ் இந்து’ அம்பலப்படுத்துகிறது தளி. இராமச்சந்திரன் குற்றப் பின்னணி
தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுத்தி யுள்ள வேட்பாளர் தளி. இராமச்சந்திரன் குற்றப் பின்னணியை சுட்டிக்காட்டி அவரை மாற்ற வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. அந்த வேட்பாளரின் குற்றப் பின்னணியையும், கம்யூனிஸ்ட் கட்சி அவரை வேட் பாளராக்கியதையும் விமர்சித்து, ‘தமிழ் இந்து’ நாளேட்டில் (எப்.25) சம்ஸ் எழுதியுள்ள கட்டுரையின் ஒரு பகுதி: தருமபுரி, தளி தொகுதியில் மநகூ சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் ராமச்சந்திரன். வரகானப்பள்ளி மலைக் கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, இன்றைக்குத் தமிழகத்தின் செல்வந்தர். சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர். நம்முடைய அரசியல், அதிகார, ஊடக மையங்களின் பார்வையிலிருந்து வெகுவாக விலகியிருக்கும் தமிழக-கர்நாடக எல்லையோரப் பகுதி இவருடைய தொகுதி. மலையோரக் கிராமங்கள் சூழ்ந்த தளி தொகுதியில் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கிக் கொண்டிருப்பவர் ராமச்சந்திரன். கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பகுதியில் ராமச்சந்திரனைப்...