Tagged: தலையங்கம் யாழ்ப்பாணம்

தலையங்கம் யாழ்ப்பாணத்தில் அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவர்

தலையங்கம் யாழ்ப்பாணத்தில் அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவர்

அய்.நா. மனித உரிமை ஆணையர், சையத் அல் உசேன், கடந்த வாரம், தமிழ் ஈழப் பகுதிகளுக்கு நேரில் சென்று போரில் பாதிக்கப்பட்ட மக்களையும், தமிழர் அமைப்பினரையும் நேரில் சந்தித்திருக்கிறார். வடக்கு மாகாண முதலமைச்சரும் அந்நாட்டின் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான விக்னேசுவரன், ஆணையரை சந்தித்து சிங்கள அரசால் நீண்டகாலமாக சிறைபடுத்தப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்ய இலங்கை அரசுக்கு அழுத்தம் தரவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இறுதிக்கட்ட இனப்படுகொலையின்போது ‘காணாமல்’ போனவர்களின் உறவினர்கள் அவர்களின் உருவப் படங்களை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் ‘நலன்புரி நிலையம்’ என்ற உதவி மய்யத்தில் தமிழர்களை ஆணையர் சந்தித்துள்ளார். அப்போது போரில் பாதிப்புற்று, சொந்தப் பகுதிகளுக்கு திரும்ப முடியாது தவிக்கும் தமிழர்கள், “எங்களுக்கு விமான நிலையமும் வேண்டாம்; துறைமுகமும் வேண்டாம்; எங்கள் நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் இராணுவத்திடமிருந்து மீட்டுத் தாருங்கள்” என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்திடவும், நேர்மையான மறுவாழ்வுக்கும் இலங்கை அரசுக்கும்...