Tagged: தலைமை அறிக்கை

ரயில் மறியல் போரட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் பங்கேற்கிறது !

காவிரி நதிநீர் உரிமையை பாதுகாக்கவும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட மத்திய அரசை வலியுறுத்தியும் நடைபெறும் இப்போராட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகம் முழு ஆதரவினை தெரிவித்து ரயில் மறியலில் பங்கேற்கிறது. அனைத்து விவசாய சங்கங்கள்,அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் (17.10.2016 – 18.10.2016) ஆகிய நாட்களில் நடைபெற இருக்கும் ரயில் மறியல் போராட்டத்தில் கழக தோழர்கள் வாய்ப்புள்ள இடங்களில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2016

தமிழக சட்ட மன்ற தேர்தலில் கழகத்தின் நிலைப்பாடு குறித்து கழக தலைமைக் குழுவின் முடிவுகள் ! இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு இதர தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு கழகத்தின் தலைமைக் குழு முடிவுகள் ! தமிழக சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களையும், இதர தொகுதிகளில் தி.மு.க. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்களையும் ஆதரிக்க திராவிடர் விடுதலைக் கழகம் முடிவு செய்துள்ளது. 19.4.2016 அன்று திருப்பூரில் கழகப் பொருளாளர் துரைசாமி தோட்டத்தில் கழக தலைமைக் குழு கழகத்தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் கூடியது. தலைமைக் குழுவின் விரிவான பரிசீலனைக்குப் பிறகு கீழ்க்கண்ட தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. 1) தமிழ்நாடு தேர்தல் களத்தில் இதுவரை கண்டிராத அளவில் குழப்பங்களும்...