‘கருப்பும்-காவியும்’ இணைந்த வரலாறு
பெரியாருக்கும்-குன்றக்குடி அடிகளாருக்கும் இடையே உருவான ‘கொள்கை நட்பு’ குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளேடு (செப்.16, 2016) ஆய்வாளர் ஏ.ஆர். வெங்கடாசலபதியின் கட்டுரை ஒன்றை வெளியிட் டிருக்கிறது. அக்கட்டுரையின் சுருக்கம்: “1945ஆம் ஆண்டு, 20 வயதே நிரம்பிய குன்றக்குடி அடிகள், தருமபுரம் சைவமடத்தில் சேர்ந்து, சைவ சித்தாந்தம், சங்க இலக்கியங்கள் மற்றும் சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமைப் பெற்றார். அப்போது குன்றக்குடி, திருவண்ணாமலை சைவ மடத்துக்கு இளைய சாமியார் ஒருவரை தேடிக்கொண்டிருந்தபோது, குன்றக்குடி அடிகளாருக்கு அழைப்பு விடுத்தது. தருமபுரம் மடம் அடிகளாரை அனுப்பி வைக்க மறுத்தாலும், பிறகு ஒரு வழியாக சம்மதித்தது. இளைய மடாதிபதியாக குன்றக்குடி மடத்தில் சேர்ந்த ஆதீனம், அடுத்த 3 ஆண்டுகளில் குன்றக்குடி மடாதிபதி ஆகி விட்டார். சைவத்தில் வெள்ளாளர் ஜாதியினர் மட்டுமே சைவ மடங்களில் சன்னிதானமாக முடியும். இவரும் அதே ஜாதிப் பிரிவைச் சார்ந்தவர்தான். ஆனால், சீர்திருத்த எண்ணங்களைக் கொண்டிருந்தார். மடத்துக்கு அருகே உள்ள தாழ்த்தப்பட்டோர் குடியிருப்புகளுக்குச் சென்றார். ‘வழிபாட்டு மொழியாக...