‘ஆனா ரூனா’ முடிவெய்தினார்
‘ஆனா ரூனா’ என்று அனைவரும் அன்புடன் அழைக்கும் அடையாறு மாணவர் நகலக உரிமையாளர் அடையாறு அருணாசலம் (77) மே 23, பிற்பகல் 4 மணி யளவில் முடிவெய்தினார். ‘தந்தை பெரியார் தமிழிசை மன்றம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, தலைநகர் சென்னையில் தமிழிசை விழாக்களை தனது சொந்த பொருள் செலவில் நடத்திய பெருமைக்குரியவர். தமிழிசை பாடகர்கள் பலரையும் அடையாளம் கண்டு மேடையேற்றினார். ‘மியுசிக் அகாடமி’களும், ‘சபா’க்களும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே கதவு திறந்த காலத்தில் பெரியார் பெயரிலேயே தமிழிசை விழாக்களை நடத்திக் காட்டியவர் ‘ஆனா ரூனா’. தான் முன்னின்று தொடங்கிய ‘தமிழ்ச் சான்றோர் பேரவை’ வழியாக தமிழ் வழிக் கல்விக்காக பரப்புரைகள் தெருமுனைக் கூட்டங்கள், பேரணிகளை தனது சொந்த செலவில் நடத்தி தமிழகத்தின் மய்ய நீரோட்டத்துக்கு தமிழ் வழிக் கல்வி பிரச்சினையை கொண்டு வந்தது அவரது தீவிர முயற்சிகளாகும். அதன் காரணமாகத்தான் தமிழ் வழிக் கல்வி குறித்து ஆராய அன்றைய தி.மு.க. ஆட்சி நீதிபதி...