Tagged: தமிழர் வசந்தம்

‘உலகம் சுற்றும் மோடி; மெரினா பக்கம் வாடி!’

‘உலகம் சுற்றும் மோடி; மெரினா பக்கம் வாடி!’

மாணவர், இளைஞர்கள் நடத்திய எழுச்சிப் போராட்டம் குறித்து வெளி வந்த சில முகநூல் பதிவுகள். ஜல்லிக்கட்டு ஆதரவு, பீட்டா எதிர்ப்பு என்பன இரண்டு நாட்களாக மத்திய அரசு எதிர்ப்பு, நரேந்திர மோடி எதிர்ப்பு என்பதாக உருப்பெற்றுள்ளது. நான் தொடர்ந்து சொல்லிவருவதைப்போல இது ஒரு கநனநசயட அரசமைப்பு என்பதை மறந்து எதேச்சதி காரத்துடன் செயல்படும் மத்திய அரசுக்கு எதிரான போராட்டமாக இன்று அது வடிவம் பெற்றுள்ளது. பல்வேறு விதமான மோடி எதிர்ப்பு முழக்கங்கள், நகைச்சுவை யாய், கவிதையாய், அரசியல் கூர்மை மிக்க தாய், சற்றே ஆபாசமாய்… வெகுமக்கள் தன்மையின் அனைத்து பலங்களுடனும், பல வீனங்களுடனும் ஆர்ப்பரிக்கும் முழக்கங்கள் தமிழக பா.ஜ.க தலைமையின் எதிர்கால ஆசைகளில் மட்டும் மண் வார்க்கவில்லை.. பா.ஜ.க பக்கம் சாய்ந்து பதவி, பணச் சுகம் காணலாம் எனத் தரகு வேலை பார்த்துவந்த தூதுவர்களின் ஆசைக்கும் ஆப்பு வைத்து விட்டது.                                      – அ. மார்க்ஸ் அண்ணா ஒரு நிமிஷம்ணா… ஆங்காங்கே...

தலையங்கம் இலக்கு நோக்கி முன்னேறுவோம்; வெல்லட்டும் மாணவர் எழுச்சி!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்களின் போராட்ட எழுச்சி உலகம் முழுதும் தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. தமிழக முதல்வர் அவசரமாக டெல்லிக்குப் போய் பிரதமரிடம் அவசரச் சட்டம் கொண்டுவர வலியுறுத்தியிருப்பது மாணவர் போராட்டத்துக்கு கிடைத்த முதல் வெற்றி. வன்முறைகளில் இறங்கிடாது அமைதி வழியில் போராட்டத்தைத்  தொடர்ந்து முன்னெடுத்திட வேண்டும் என்ற மாணவர், இளைஞர்களின் அணுகுமுறையைப் பாராட்ட வேண்டும். அந்த அணுகுமுறை தான் போராட்டத்தை வெற்றிப் பாதை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. இரண்டாவதாகப் போராட்டத்தின் இலக்கு என்பது மிகவும் முக்கியமானதாகும். தமிழர்களின் உரிமைகள் பண்பாடுகளை தொடர்ந்து மறுத்து வரும் நடுவண் அரசுகள் மற்றும் உச்சநீதிமன்றம் போன்ற அதிகார அமைப்புகளுக்கு எதிரானதே இந்தப் போராட்டத்தின் முதன்மையான இலக்கு. காவிரி உரிமை மறுப்பு, நுழைவுத் தேர்வு திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, புதிய கல்வித் திட்டம் என்ற பெயரில் குலக்கல்வி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு உரிமைப் பறிப்புகளினால் உருவாகி வந்த அழுத்தங்களே ‘ஜல்லிக் கட்டு...