Tagged: தமிழக பாஜக

தமிழகத்தில் பா.ஜ.க.  கால் ஊன்றுமா?

தமிழகத்தில் பா.ஜ.க. கால் ஊன்றுமா?

‘அந்திமழை’ டிசம்பர் மாத இதழில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரை. மகாராஷ்டிராவை ‘இந்து இராஜ்ய மாக்குவோம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து அங்கே ஆட்சியைப் பிடித்தது சிவசேனை. அதேபோல் தமிழ்நாட்டை இந்துக்களின் தேசமாக மாற்றிக் காட்டுகிறாம் என்று கூறி வாக்கு கேட்கும் துணிவு தமிழக பா.ஜ.க. வுக்கோ, அதன் சார்பு அமைப்புகளுக்கோ இருக்குமா? இத்தனைக்கும் ‘இந்தியா இந்துக்களுக்கான நாடு’ என்பதற்காகவே தொடங்கப்பட்டதுதானே பாரதிய ஜனதா! மகாராஷ்டிராவில் முன் வைத்த முழக்கத்தை தமிழ்நாட்டில் கூறிவிட்டு, தங்கள் அரசியலை முன்னெடுக்க முடியாது என்பது அதன் தமிழக தலைவர்களுக்கே தெரியும்! தமிழ்நாடு, மத தேசியத்திலிருந்து தன்னை முற்றிலுமாக விலக்கிக் கொண்டிருக்கிற ஒரு மாநிலம். தமிழ், தமிழன், சமூக நீதி, சமூக நல்லிணக்கம் என்பதே தமிழக அரசியலுக்கான மய்ய நீரோட்டம், இதற்கான விதைகள், 1920ஆம் ஆண்டுகளிலேயே இங்கே விதைக்கப்பட்டு விட்டன. திராவிடர் இயக்கம், திராவிட அரசியல் கட்சிகளின் வேரை தமிழகத்தில் கிள்ளி எறிந்து விடுவது அவ்வளவு...