தபோல்கர் கொலை:
இந்து தீவிரவாதி கைது மகாராஷ்டிராவில் பகுத்தறிவாளர் டாக்டர் தபோல்கர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து தீவிரவாத அமைப்பைச் சார்ந்த ஒருவரை சி.பி.அய். கைது செய்துள்ளது. அவரது பெயர் வீரேந்திர தாப்தே. ‘இந்து ஜன் ஜாக்ருதி சமிதி’ என்ற அமைப்பின் தீவிர உறுப்பினர். கம்யூனிஸ்ட்டும் பகுத்தறிவாளருமான கோவிந்த் பன்சாரே, இதேபோல் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதே இந்து தீவிரவாத அமைப்பைச் சார்ந்த சமீர் கெய்க்வார்ட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2009இல் கோவாவில் நடந்த குண்டு வெடிப்பில் தேடப் பட்டு வரும் முக்கிய இந்து தீவிரவாதி சாரங் அகோல்கர்தான் தபோல்கர் கொலையில் முதன்மை குற்றவாளி என்று சி.பி.அய். கருதி அவரை தேடி வருகிறது. குற்றம்சாட்டப்பட்டுள்ள இந்த இருவருக்கும் அகோல்கருக்கும் இடையே இணைய தளம் வழியாக கடிதத் தொடர்புகள் இருந் துள்ளதை சி.பி.அய். கண்டு பிடித்துள்ளது. சரியான திசையில் சி.பி.அய். செயல்படத் தொடங்கியிருக்கிறது என்றும், காலம் கடந்த நடவடிக்கை...