பறிபோகிறது, தமிழர் வேலை வாய்ப்புகள் தபால் ஊழியர் பணிநியமனத்தில் இந்திக்காரர்களின் மோசடி
தமிழ்நாட்டில் உள்ள தபால் நிலையங்களில் தபால்காரர் பதவிகளை நிரப்பக்கோரி கடந்த ஆண்டு 21.10.2016 அன்று தமிழ்நாடு தபால் வட்டத்தின் சார்பில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இப்பதவிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் இருந்து ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பித்து நுழைவுத்தேர்வும் எழுதினர். இத்தேர்வில் தமிழில் கட்டாயமாக 25 மதிப்பெண்களுக்கு தேர்வெழுதவேண்டும்.இதன் முடிவுகள் நான்கு நாட்களுக்கு முன்னர் இணையத் தில் வெளியிடப்பட்டது. தமிழில் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததால் மற்ற தாள்களில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழில் தோல்வி அடைந்து இருந்தனர். ஏதோ, தமிழ்ப் பேராசிரியர் பதவிக்கு தேர்வு நடப்பதுபோல் அவ்வளவு கடினமாக வினாத்தாள் தயாரிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு, தமிழில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்றவர்களின் பட்டியலைப் பார்த்ததும் நம்மவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இவர்கள் யாரும் தமிழ்நாட்டில் இல்லை, தமிழர்களும் இல்லை அனைவரும் அரியானா, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டபோது ஒருவருக்கும் தமிழ் தெரியவில்லை தொடர்பு கொண்ட சற்று நேரத்திற்கு பின் இவர்களின் அலைபேசிகள்...