Tagged: தனித்தமிழ்நாடு

மீண்டும் தனித் தமிழ்நாடு கோருவதற்கான சூழ்நிலை இப்போதுதான் உருவாகியுள்ளது- கொளத்தூர் மணி எச்சரிக்கை

தமிழர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதால் தனித் தமிழ்நாடு கோரிக்கையை மீண்டும் முன்வைக்கும் சூழல் உருவாகியுள்ளது என்று திவிக தலைவர் கொளத்தூர் தா.செ. மணி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழர்களுக்கான உரிமை மறுக்கப்படும் இப்போதுதான் தனித் தமிழ்நாடு கோரிக்கையை மீண்டும் முன்வைப்பதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது என்று திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1956-ம் ஆண்டு வரை சென்னை மாகாணமாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிஷாவின் பகுதிகள் இணைந்து இருந்தன. ஆனால் மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததால் 1956-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி சென்னை மாகாணம் தனித்தனி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. அப்போது தமிழகத்தின் திருப்பதி, திருத்தணி, உள்ளிட்ட பல பகுதிகள் ஆந்திராவோடு சேர்க்கப்பட்டன. கன்னியாகுமரி, இடுக்கி, தேவிகுளம், பீர்மேடு கேரளாவுடன் இணைக்கப்பட்டது. கொள்ளேகால், காவிரி பிறக்கும் குடகு, கோலார் தங்கவயல் உள்ளிட்டவை கர்நாடகாவோடு இணைந்தன. உயிர்த்தியாகங்கள்.. திருத்தணியும் கன்னியாகுமரியும் உயிர்த் தியாகங்களுக்குப்...