Tagged: தட்சணப் பிரதேசம்

‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம் தனித் தமிழ்நாடு பெறுவதே – நமது ஒரே இலக்காக வேண்டும்!

‘தட்சிணப் பிரதேச’ திட்டத்தை எதிர்த்து 1956 இல் பெரியார் முழக்கம் தனித் தமிழ்நாடு பெறுவதே – நமது ஒரே இலக்காக வேண்டும்!

29.1.56 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வேலூர் டவுன் ஹாலில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் கூட்டத்தில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு: தமிழ்நாட்டிற்கு இந்திய அரசாங்கம் இழைத்து வரும் கொடுமைகளைக் கவனித்தால் மிகவும் முக்கியமாக நான்கைந்து விஷயங்களில் நாம் கிளர்ச்சி செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். அவைகளில் ஒன்றாக தமிழ்நாட்டுடன் இணைக்கப் பட வேண்டிய தமிழர்கள் பெரும்பான்மையும் வசித்து வரும் தேவிகுளம்-பீர்மேடு போன்ற பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்பதே. ஆனால் இது அவசியமற்றதாகி விட்டது.காரணம் தலைக்கே ஆபத்து வருகையில் தலைப்பாகையைப் பத்திரப்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதைப்போல் நம்முடைய அடிப்படையான நாட்டுக்கே கேடு வருகையில் இப்போது தேவிகுளம்-பீர்மேடு என்று கதறுவதில் பலன் இல்லை. முதலில் நாட்டைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு நாட்டைக் காப்பாற்றி அதன் பிறகு வேண்டுமானால், தேவிகுளம், பீர்மேடு பற்றிய கவலை கொள்ளலாம். இன்றைய தினம் நாட்டையே பறி கொடுக்கும் நிலைமை யில் தட்சிண பிரதேசம் என்று...