இடஒதுக்கீட்டால் ‘தகுதி, திறமை’ பாதிக்கப்படவில்லை
இடஒதுக்கீடு கொள்கை ‘தகுதி திறமை’க்கு எதிரானது என்று பார்ப்பனர்கள் இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து முன் வைக்கும் வாதத்தில் உண்மையில்லை என்று ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. டெல்லி பொருளாதார ஆய்வு மய்யத்தின் பேராசிரியர் அஷ்வினி தேஷ்பாண்டே, அமெரிக்காவின் மிச்சிகன் பொருளாதார பல்கலைக்கழக பேராசிரியர் தாமஸ் வெய்ஸ்கோஃப் இருவரும் இணைந்து உலகின் மிகப் பெரும் பொதுத் துறை நிறுவனமான இந்திய தொடர்வண்டித் துறையில் இந்த ஆய்வை நடத்தினர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதால் தொடர்வண்டித் துறையில் உற்பத்தியோ திறனோ பாதிப்புக் குள்ளானதா என்ற இந்த ஆய்வு 1980-லிருந்து 2002 வரையுள்ள ஆண்டுகளை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டது. இந்த ஆய்வை உலகின் தலைசிறந்த ஆய்விதழான ‘வேல்ட் டெவலப் மென்’ (World Devleopment) வெளியிட் டுள்ளது. பிரிவு ‘ஏ’ முதல் ‘டி’ வரை பல்வேறு நிலைகளில் பணியாற்றும் 1.3 மில்லியன் ஊழியர்களிட மிருந்து மிக விரிவாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் இடம் பெற்றவர்களையும் கூடுதலாக...