வினாக்கள்… விடைகள்…!
12 ஆண்டுகளுக்குப் பிறகு சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோ சனைக் கூட்டம் நடந்தது. – செய்தி அப்படியா? 2004, 2009 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் பற்றி எல்லாம் விரிவாக அலசியிருப்பாங்க. திருப்பதி, திருமலையில் அடிக்கடி கம்ப்யூட்டர் கோளாறு ஏற்படுவதால், பக்தர்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள். – ‘தினமலர்’ செய்தி இதை ‘ஏழுமலையான்’ கவனத்துக்குக் கொண்டு செல்லலாம் என்றால் அதற்கும் ‘மின்னஞ்சல்’ வேலை செய்ய வேண்டுமே! என்னதான் செய்வது? உ.பி.யில் ‘ராம ராஜ்யம்’ அமைய வேண்டும். – மோடி அமைக்கலாம்! தேர்தல் ஆணையத்தில் ‘ஸ்ரீராமன்’ கட்சியை பதிவு செய்து விட்டீர்களா? எனக்காக வைக்கப்படும் பேனர்களை விழா முடிந்ததும் உடனே அகற்றச் சொல்லி விட்டேன். – அதிகாரிகள் கூட்டத்தில் ஜெயலலிதா சரிங்க மேடம். இதையும் ஒரு பேனரில் எழுதி, பேனர்களோடு பேனர்களாக வைத்து விடலாம். ஆம் ஆத்மி கட்சித் தலைவரான கேத்ரிவால் என்ற சாதாரண மனிதரை முதல் வராக்கியது காங்கிரஸ். – அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் பெருமிதம் காங்கிரஸ் தனிமைப்பட்டு...