Tagged: ஜூனியர் விகடன்

தமிழருவி மணியன் கட்டுரைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மறுப்பு

தமிழருவி மணியன் கட்டுரைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி மறுப்பு

தமிழ்நாட்டில் பா.ஜ.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. கூட்டணி உருவாக காய் நகர்த்தி வரும் காந்திய இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், மோடியை நியாயப்படுத்தி, ‘ஜூனியர் விகடன்’ ஏட்டில் எழுதிய கட்டுரைக்கு மறுப்புரையாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘ஜீ.வி.’க்கு எழுதிய மறுப்பு இது. 9.10.2013 அன்று ‘ஜூனியர் விகடன்’ இதழில் ‘கதர் ஆடையில் காவிக் கறை எதற்கு?’ என்ற தலைப்பில் அந்த மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறு சிறு மாற்றங்களுடன் வெளியிடப்பட்டுள்ள அக்கட்டுரையின் முழுமையான வடிவத்தை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. இந்தியாவில் அடுத்து அமையப் போகும் ஆட்சி – அது எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்கள் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்துவிடப் போகிறது; ஊழலற்ற, நேர்மையான ஆட்சி ஒன்று மலரப் போகிறது என்கிற மாயைகளில் மூழ்கிட நாம் தயாராக இல்லை. தேர்தல் வழியாக மட்டுமே சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை மாற்றி அமைத்துவிட முடியும் என்ற நம்பிக்கையும் நமக்கு இல்லை. ஆனால், “இந்தியாவின்...