ஜாதிக்கு ஒரு சுடுகாடு! இது சமத்துவ நாடா? மயிலாடுதுறையில் எழுச்சியுடன் நடைபெற்ற கழகப் பொதுக்கூட்டம்
நாகை மாவட்டம் வழுவூர் திருநாள் கொண்ட சேரி தலித் மக்கள் மீதான ஜாதிய அடக்கு முறைகளை கண்டித்து ஜாதிக்கொரு சுடுகாடு! ‘இது சமத்துவ நாடா?’ என்கிற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நாகை மாவட்ட செயலாளர் தெ.மகேஷ் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. இந்தியாவில் பிறக்கும் குடிமக்கள், பிறக்கும்போதே ஜாதி அடையாளத் துடன் தான் பிறக்கிறார்கள். நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே என்று மயானத்தில் நின்று பாடுவதாக பழைய சினிமா பாடல் ஒன்று உண்டு. ஆனால் நடைமுறையில் இறந்த பிறகும் ஜாதி அடையாளம் மக்களை விடுவதில்லை. மதம் மாறினா லும் அது நிழல் எனத் தொடர்கிறது. இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் சமத்துவ உரிமையை அடிப்படை உரிமை என பிரகடனப்படுத்துகிறது. தலித்துகள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனாலும் கூட இந்தியாவில் தீண்டாமை கொடுமை பல வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. திருநாள்கொண்டசேரியில் தலித் முதியவர்...