Tagged: சோ.

‘துக்ளக்’ சோவின் இனப்பற்று; படம் பிடிக்கிறார், பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1973ஆம் ஆண்டு ‘தென்மொழி’ ஏட்டில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி: ‘இராசாசி நினைவாலயத்துக்கு’ இவர்கள் தரும் விளம்பரம், காந்திக்குக் கூடத் தந்ததில்லை. ‘தமிழகத்தில் இராசாசி காலடிப்பட்ட இடங்களை யெல்லாம் புண்ணியதலமாகக் கருத வேண்டும்’ என்று ‘சுதந்திர’க்கட்சி சா. கணேசன் வெளிப்படுத்திய கருத்தை இவர்கள் மிகப் பெருமையுடன் வெளி யிட்டுக் கொண்டனர். (சா. கணேசன் மூளையில் இவ்வளவு அடிமைத்தனம் புகுந்திருக்கக் கூடாது) துக்ளக்கில் ‘சோ’ இவர்கள் இனத் தலைவர் இராசாசியைப் பற்றி இப்படி எழுதி யிருந்தார்: “இராசாசியைப் பாராட்டுவதற்கோ அல்லது அவரிடம் குற்றம் காண் பதற்கோ அவருக்கு நிகரானவர்கள் யாரும் இந்நாட்டில் இல்லாமல் போய் விட்டார்கள்… மனம், சிந்தனை, வாக்கு, செயல் எல்லாவற்றிலும் பரிபூரணத் தூய்மையுடன் விளங்கிய ஒரு அசாதாரணமான மனிதரை மிகச் சாதாரணமாக மதித்துவிட்ட மடத் தனத்தின் விளைவுகளிலிருந்து இந்த நாடு என்று விடுபடுமோ தெரியாது… இராசாசி தெய்வ நம்பிக்கை மிகுந்தவர். அந்த ஒரு கரணியத்திற்காகவாவது அவர் வாழ்ந்த...

முகத்திரையை கிழிக்கிறார், பிரசாந்த் பூஷண்: ‘சோ’ ராமசாமியா? ‘சோர்’ ராமசாமியா?

முகத்திரையை கிழிக்கிறார், பிரசாந்த் பூஷண்: ‘சோ’ ராமசாமியா? ‘சோர்’ ராமசாமியா?

‘நேர்மையாளர்’, ‘நடுநிலையாளர்’ என்ற வேடத்துக்குள் பதுங்கிக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனியத்தைப் பரப்பி வருபவர் ‘துக்ளக்’ சோ. மோடியைப் பிரதமராக்க வேண்டும் என்று இரண்டு ஆண்டுகாலமாக வலியுறுத்தி வருவதோடு, பாரதிய ஜனதா கட்சிக்குள்ளும் மோடிக்காக ஆதரவு திரட்டினார். தீவிர அத்வானி ஆதரவாளராக இருந்து அதற்கு நன்றிக் கடனாக மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் பெற்றவர்தான்  ‘சோ’. தனது ‘துக்ளக்’ ஆண்டு விழாவுக்கு மோடி, அத்வானி இருவரையும் அழைத்து ஒரே மேடையில் ஏற்றி ‘சமரச’ தூதுவராக, தன்னை அடையாளம் காட்டிவர். தமிழ்நாட்டில் ஜெயலலிதாவுக்கும் நெருக்கமான ஆலோசகராக உள்ளார். மோடியின் முதல்வர் பதவி ஏற்பு விழாக்களில் தவறாது பங்கேற்பவர், ஜெயலலிதா. ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்பு விழாவிலும் பங்கேற்றார் மோடி. இந்த நெருக்கத்தின் இணைப்புப் பாலமாய் நிற்பவர், ‘துக்ளக்’ சோ, மோடி பிரதமராக வேண்டும்; அவருக்கு வாய்ப்பு இல்லையேல் ஜெயலலிதா பிரதமராக வேண்டும் என்று தனது பத்திரிகையில் தொடர்ந்து எழுதி வருகிறார். இப்போது வெளிப்படையாக பா.ஜ.க. கூட்டணி...