தமிழக அரசின் அத்துமீறல்களுக்கு துணை போகும் ‘அறிவுரைக் குழுமம்’: கழகத் தலைவர் கொளத்தூர் மணி கடும் கண்டனம்
சேலம் சிறை வாசலில் உற்சாக வரவேற்பு தேசிய பாதுகாப்புச் சட்டம் போன்ற அடக்கு முறை சட்டங்களை இனி எவர் மீதும் பயன் படுத்தக் கூடாது என்று சேலம் சிறையிலிருந்து விடுதலையானவுடன் சிறைவாசலில் அளித்த பேட்டியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தினார். இந்தச் சட்டங்கள் முறைகேடாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்று கண்காணிப் பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்ட ‘அறிவுரைக் குழுமம்’ ஒன்று செயல்படுகிறது. அந்த குழுமம் கண்காணிப்பு வேலை செய்யாமல் கண்களை மூடிக் கொண்டே ஆட்சியாளர்கள் முறைகேடாக பயன்படுத்தும் அடக்குமுறை சட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குவது ஜனநாயகத்துக்கே அவமானம். ஓய்வு பெற்ற மூத்த நீதிபதிகள் இப்படி முறைகேட்டுக்கு துணை போய்க் கொண்டிருக்கும் போது உயர்நீதிமன்றத்தின் இளம் நீதிபதிகள் இந்த அடக்குமுறை சட்டங்கள் முறை கேடாகப் பயன்படுத்துவதை நீக்கம் செய்து விடுகிறார்கள். இதைத் தங்களுக்கு நேர்ந்த அவமானமாகக்கூட இந்த ஓய்வு பெற்ற நீதிபதிகள் கருதிப் பார்க்க மறுப்பது வெட்கக் கேடானது...