Tagged: செயலவை நிகழ்வுகள்

செயலவை நிகழ்வுகள்

செயலவை நிகழ்வுகள்

திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் 21.6.2014 சனிக் கிழமை 11 மணியளவில் கோவை அண்ணாமலை ஓட்டல் அரங்கில் கூடியது. செயலவைத் தலைவர் துரைசாமி தலைமையேற்றார். கோவை கழகத் தோழியர் ராஜாமணி, கடவுள்-ஆத்மா மறுப்புகளைக் கூற, மாநகர மாவட்டச் செயலாளர் தோழர் நேருதா° வரவேற்புரையாற்றிட பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரை யாற்றினார். மாறி வரும் அரசியல் சூழலில் பெரியாரியலை முன்னெடுப்பதில் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகளை விளக்கி, ஒரு மணி நேரம் பேசினார். கழகத்தின் நிதிநிலை மற்றும் மக்கள் சந்திப்பு இயக்கம் குறித்து பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி விரிவாக விளக்கினார். உரையாற்றிய தோழர்கள்: மண்டல செய லாளர்கள் சேலம்-சக்தி வேலு, மதுரை-இராவணன், நெல்லை-குமார், தஞ்சை-இளையராசா, கோவை-விஜியன், ஈரோடு-இராம இளங்கோவன் ஆகியோர் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி தீர்மானங்களை முன்மொழிந்து உரை யாற்றினார். 2 மணி வரை கூட்டம் நீடித்தது. மதிய உணவுக்குப் பிறகு மீண்டும் 3 மணிக்கு...