Tagged: சூத்திரனுக்கு திருமணம்

சூத்திரனுக்கு சட்டப்படி திருமண உரிமையே மறுக்கப்பட்டது

சூத்திரனுக்கு சட்டப்படி திருமண உரிமையே மறுக்கப்பட்டது

மேட்டூர் கழகத் தோழர் செ. மார்ட்டின்-விஜயலட்சுமி மகள் வி.மா.அன்புக்கரசி, பி.ஈ., கொளத்தூர் கு. மணி-மணிமேகலை ஆகியோரின் மகன் ம.திலிப்குமார், எம்.பி.ஏ. ஆகியோரின் ஜாதி-மத மறுப்பு மணவிழா 21.8.2016 அன்று கொளத்தூர் எஸ்.எஸ். திருமண மண்டபத்தில் சிறப்புடன் நடந்தது. இதில் மணவிழா அழைப்பிதழ் மிகவும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. 1958இல் பெரியார் பேச்சு தொகுப்பாக ‘வாழ்க்கைத் துணை நலம்’ என்ற தலைப்பில் வெளி வந்த நூலோடு இணைத்து, அழைப்பிதழ் தயாரிக்கப்பட் டிருந்தது. தந்தை பெரியாரின் சிறப்பான கருத்துகள் இடம் பெற்றிருந்த இந்த நூலில், ‘சூத்திரனுக்கு திருமண உரிமையே கிடையாது’ என்று பிரிட்டிஷ் இந்தியாவில் நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பை பெரியார் எடுத்துக் காட்டியிருக்கிறார். உரையின் அந்தப் பகுதி: ‘இந்து லா’வில் பிராமணன், சூத்திரன் என்ற பிளவுகள் உண்டே தவிர – நாயுடு, செட்டியார், படையாட்சி, பிள்ளை என்ற தனி வகைகள் இல்லை. ஆகையால் பார்ப்பனரைத் தவிர்த்து நாம் எல்லோரும் ஒரே சாதிதான். திராவிடர் என்று...