இனப்படுகொலைக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் கலந்தாய்வு
இராஜஸ்தான், கருநாடகா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இயங்கி வரும் மனித உரிமை அமைபபுகள் சென்னையில் மார்ச் 8, 9 தேதிகளில் கூடி தூக்குத் தண்டனை ஒழிப்பு மற்றும் ஈழத் தமிழர் பிரச்சினைக் குறித்து விவாதித்து, இந்தப் பிரச்சினையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் செயல் திட்டங்களை வகுத்தன. இந்திய அரசு மரணதண்டனை முழுவதுமாக நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை இதில் நம்பிக்கையுள்ள தேசிய மாநில கட்சிகள், தங்கள் தேர்தல் அறிக்கையில் வலியுறுத்த வேண்டும் என்று கூட்டத்தின் முடிவில் வேண்டுகோள் விடப்பட்டது. கருணை மனு காலதாமதத்தின் அடிப்படையில் 15 தூக்குத் தண்டனை கைதிகளை உச்சநீதிமன்றம் விடுவித்து அளித்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் மனித உரிமைக் குழுக்கள் வரவேற்றன. இரண்டாம் நாள், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள்; அய்.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள வரைவு தீர்மானம் குறித்து, பிரதிநிதிகள் விரிவாக விவாதித்தனர். தமிழர் பிரச்சினை என்ற...