இடஒதுக்கீடுகளை புறந்தள்ளும் தமிழக அரசைக் கண்டித்து ஜன.25இல் ஆர்ப்பாட்டங்களை நடத்துவீர்!
தமிழக அரசே! ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர் நியமனங்களை ரத்து செய்! ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ என்ற பெயரைப் பயன்படுத்தி, இட ஒதுக்கீட்டு உரிமைகளைப் பறிக்காதே! ஓமந்தூர் ராமசாமி தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை மருத்துவமனையாக்கும் தமிழக அரசு மருத்துவர் தேர்வில் இடஒதுக்கீடுகள் பின்பற்றப்பட மாட்டாது என்று அறிவித்திருக்கிறது. ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள் தேர்வு செய்யப்படுவதால் இடஒதுக்கீட்டை அமுலாக்க முடியாது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா! ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்துவிட்டு பிறகு நிரந்தர மாக்கப்படுவதே இதில் அடங்கியுள்ள சதி. எனவே ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும். அதற்கு பதிலாக தமிழ்நாடு முழுதும் – மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் தகுதி வாய்ந்த மருத்துவர்களை இந்த மருத்துவமனையில் பணியமர்த்தம் செய்ய முடியும். ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவ மனைகளுக்கு இடஒதுக்கீடு கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்கிறார், முதல்வர் ஜெயலலிதா. ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ என்ற பெயரை மாற்றி வேறு பெயரை ஏன்...