Tagged: சமஸ்கிருதத் திணிப்பு

பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை

சமூக நீதியின் நோக்கத்தையே சிதைக்கிறது ‘வடிகட்டும்’ முறை மக்கள் விரோத கல்விக் கொள்கைக்கு எதிரான கூட்டு போராட்டக் குழு சார்பில் சென்னையில் சேப்பாக்கத்தில் செப்.29 அன்று பகல் 11 மணியளவில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆயிரக்கணக்கில் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தொடங்கி வைத்தார். கழகச் சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்றுப் பேசினார். அவரது உரையிலிருந்து: “குலக் கல்வித் திட்டமாக சமஸ்கிருத திணிப்பாக புதிய கல்விக் கொள்கை வந்திருக்கிறது என்று இங்கே உரையாற்றிய பலரும் சுட்டிக்காட்டினர். குலக் கல்வி, சமஸ்கிருத அடிப்படையில் வரும் எந்தத் திட்டத்தையும் தமிழகம் ஏற்காது என்பதே தமிழகத்தின் பொதுச் சிந்தனை. இந்த சிந்தனையை மக்கள் கருத்தாக கட்டமைத்தது தான் பெரியார் இயக்கத்தின் வெற்றி. இரண்டு சிந்தனைக்கும் பின்னால் இருப்பது பார்ப்பனிய எதிர்ப்பு. மக்கள் விடுதலைக்கான இந்த சிந்தனைப் போக்கை தமிழகத்தின் கருத்தோட்டமாக உருவாக்குவதற்கு இந்த மண்ணில் மகத்தான போராட்டங்கள் நடந்தன. அந்தப் போராட்டத்தின் தாக்கத்தைத்தான் இப்போது...