Tagged: சந்துரு

7 பேர் விடுதலை: மாநில அரசுக்கு உரிமை உண்டு: முன்னாள் நீதிபதி சந்துரு கருத்து

7 பேர் விடுதலை: மாநில அரசுக்கு உரிமை உண்டு: முன்னாள் நீதிபதி சந்துரு கருத்து

ராஜீவ் கொலை வழக்குக் கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்யும் முடிவு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு வெளியிட்ட கருத்து: “இந்த விவகாரத்தில் மீண்டும் யார் வழக்குத் தொடர்ந்தாலும் ஏற்கெனவே தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்சுக்குத்தான் வழக்கு விசாரணைக்குச் செல்லும். அவர்கள் அளித்த தீர்ப்பை அவர்களே எப்படி தவறு என்று சொல்ல முடியும்? தடை வழங்க முடியும்? எனவே அதற்கான சாத்தியம் இல்லை. குற்ற விசாரணை முறைச் சட்டம் 435இன்படி, தமிழக அமைச்சரவையின் முடிவை மத்திய அரசுடன் கலந்து ஆலோசிக்கலாம் என்றுதான் கூறப்பட் டுள்ளது. அதற்காக, மத்திய அரசு சொல்வதைத்தான் கேட்கவேண்டும் என்று இல்லை. ஒருவேளை மத்திய அரசு தமிழக அரசு எடுத்த முடிவுக்கு எதிராக கருத்துக் கூறினாலும் அதனை நிராகரிக்க மாநில அரசுக்கு முழு உரிமை உள்ளது. ஆயுள் தண்டனை என்பது குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். இவர்கள் அந்த குறைந்தபட்ச தண்டனையைவிட...