ஜாதி சங்க மாநாட்டில் பெரியார் – வன்னியக்குல மாநாட்டில் பெரியார்
1930-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற வன்னியக்குல மாநாட்டில் பெரியார் சகோதரர்களே, பொதுவாக இதுபோன்ற ஜாதி மகாநாடுகள் இனி கூட்டுவதாயிருந்தால் தங்கள் ஜாதி பெருமையைப் பற்றி பாட்டி கதைகள் பேசி அர்த்தமற்றதுமான பெருமைப் பாராட்டிக்கொள்ளுவதற்காகக் கூட்டுவதாய் இருக்கக்கூடாது என்றும் தங்கள் ஜாதியோ சமூகமோ இன்னும் தனியாகவே பிரிந்திருக்கும்படி வெறும் தங்கள் ஜாதி உயர்வையே பேசிக்கொண்டிருக்கக் கூட்டப்படக் கூடாது என்றும் முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். இம்மகாநாட்டின் பயனாகவாவது நீங்கள் உங்களுக்கு மேல்ஜாதி ஒன்று இருக்கின்றது என்று எண்ணிக் கொண்டிருப்பதையும் அடியோடு ஒழித்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஏனெனில், நீங்கள் சிலஜாதிக்குப் பெரியார்கள் ஆகவேண்டுமேன்றும் ஆசையால் செய்யும் முயற்சியானது மற்றொரு ஜாதியைவிட நீ்ங்கள் கீழ் ஜாதியென்று நீங்களாகவே ஒப்புக்கொண்டவராகிறீர்கள். இதனால் உங்களாலேயே உங்களுக்கு கீழ்ஜாதி பட்டம் நிலைத்துவிடுதோடு நீங்கள் மேல்ஜாதி என்கின்ற தத்துவம் தகறாரில் இருந்துவிடுகின்றது. உதாரணமாக இப்பொழுது நீங்கள் உங்களை வன்னியகுல சத்திரியர் என்றும் சொல்லிக்கொள்ளுகிறீர்கள். இதனால் நீங்கள் தங்களை பிராமணர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு...