Tagged: சங் பரிவாரங்கள்

சங்பரிவாரங்களுக்கு அப்துல் சமது  கேள்வி

சங்பரிவாரங்களுக்கு அப்துல் சமது கேள்வி

இந்து ராஷ்டிரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை என்ன? “பார்ப்பனருக்கு சேவகம் செய்வதே இந்து ராஷ்டிரம்” என்றார், ஆர்.எஸ்.எஸ். தத்துவத்தை உருவாக்கிய கோல்வாக்கர். “இந்து ராஷ்டிரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை என்ன?” என்று கேள்வி எழுப்பினார் அப்துல் சமது. கோபியில் பிப்.28 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டில் மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது ஆற்றிய உரை: தமிழ்நாடு விரைவில் சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க இருக்கின்ற சூழலில் அரசியல் கட்சிகள் எல்லாம் யாருடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என ஆளாய் பறந்துக் கொண்டிருக்கின்ற நிலையில் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டினை இங்கு திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துகின்றது.  காவல் துறை அனுமதி மறுத்தும் உயர்நீதிமன்றத்தை அணுகி அதன் அனுமதியோடு இம்மாநாடு நடைபெறுகிறது.  அடுத்த தேர்தலைப் பற்றி யோசிப்பவர்கள் சாதாரண அரசியல்வாதிகள்; ஆனால் அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திப்பவர்கள் பெரியார் தொண்டர்கள்.  இதுதான் இம்மாநாட்டின்...