சங்கரமடம் நடத்தும் மருத்துவமனைகளின் யோக்கியதை இப்படி!
மருத்துவமனையின் கழிவுகள் உயிருக்கும் சூழலுக்கும் ஆபத்துகளை உருவாக்கக் கூடியவை. இவற்றை பொது இடங்களில் கொட்டுவதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்திருக்கிறது. இந்தக் கழிவுகளை அப்புறப்படுத்து வதற்காக விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தக் கழிவுகளை ஒரு பொது மய்யத்துக்கு கொண்டு வந்து அவற்றை ‘சுத்திகரிப்பு செய்து’ அந்த மய்யத்தின் வழியாகவே வெளியேற்ற வேண்டும். தனியார் மருத்துவமனைகள் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த சுத்திகரிப்பு மய்யம்- தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. ஆனால், சென்னையில் பல இடங்களில் குழந்தைகளுக்கான மருத்துவமனைகளை நடத்தி வரும் ஒரு நிறுவனம், இந்த விதி முறைகளை அப்பட்டமாக மீறி மக்கள் உயிருடன் விளையாடிக் கொண்டிருக்கிறது. அந்த நிறுவனம் காஞ்சி காமகோடி சங்கரமடம்தான், காமகோடி குழந்தைகள் அறக்கட்டளை. சென்னையில் நடத்திவரும் குழந்தைகள் மருத்துவமனைகளின் கழிவுகள், தனியார் வணிக நிறுவனம் ஒன்றுக்கு கிலோ ரூ.49 என்ற விலையில் நீண்டகாலமாக விற்றுக் கொண்டிருக்கும் அதிர்ச்சியான தகவல் இப்போது வெளி வந்துள்ளது. திருவான்மியூரைச் சார்ந்த...