கர்ப்பகிரக நுழைவு உரிமையை வென்றெடுத்தனர் மராட்டிய பெண்களின் புரட்சி
மகாராஷ்டிரா மாநிலத்தில் அகமது நகர் மாவட்டத்தில் சிங்னாபூர் எனும் ஊரில் சனி பகவான் கோயிலின் கர்ப்பகிரகத்தில் நுழையும் உரிமையைப் பெண்கள் போராடி பெற்றுள்ளனர். இது மகத்தான வெற்றி. கோயில் கருவறைக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதை மறுத்து ‘பூமாதா பெண்கள் படை’ என்ற போராட்ட அமைப்பை பெண்கள் உருவாக்கினார்கள். துருப்தி தேசாய் என்பவர் தலைமையில் 3 மாத காலமாக பெண்கள் போராடினார்கள். பம்பாய் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். கோயில் நுழைவு பெண் களின் அடிப்படை உரிமை என்றும், ஆண் களுக்கு உள்ள அத்தனை உரிமையும் பெண் களுக்கும் உண்டு என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதிர்ச்சி அடைந்த கோயில் நிர்வாகம், கர்ப்ப கிரகத்துக்குள் இனி ஆண்களுக்கும் அனுமதி இல்லை என்று அறிவித்தது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நோக்கத்தையே திசை திருப்பிய இந்த முடிவால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க வேண்டி யிருக்கும் என்று அஞ்சிய கோயில் நிர்வாகம், பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டு, பெண்களை...