Tagged: கொளத்தூர் மணி பேட்டி

தமிழக அரசை ஆட்டிப் படைக்கும் பா.ஜ.க.வின் சூழ்ச்சி

தமிழக அரசை ஆட்டிப் படைக்கும் பா.ஜ.க.வின் சூழ்ச்சி

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பதால், பா.ஜ.க. தமிழக அரசை மிரட்டிப் பணிய வைக்க திட்டமிடுகிறது என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார். ‘ஒன் இந்தியா’ இணையதள இதழுக்கு கொளத்தூர் மணி அளித்த பேட்டி: கேள்வி : ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது தேசியக் கொடி அவமதித்த தேசத் துரோகிகள் என்று நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார். தேசியக் கொடி எதிர்ப்பு போராட்டம் நடந்த மண் இது. இது குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? கொளத்தூர் மணி பதில் :  மத்திய அரசு தனிச்சட்டம் இயற்றுவதற்கான முன்முயற்சிகளில் உதவுவது என்பதின் மூலம் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை தங்களது போராட்டமாக காண்பிக்க முயற்சி மேற்கொண்டதன் அடையாளமாகத்தான் விவேகானந்தர் இல்லம் அருகில் போராட்டம் நடத்த மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதனால்தான் விவேகானந்தர் படத்தை வைத்துக் கொண்டு போராட்டம் தொடங்கப்பட்டது. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் ஒரு குறிப்பிட்ட படத்திற்கு என்ன வேலை என்று...