Tagged: கைதாகும் தலைவர்கள்

கைதாகும் தலைவர்கள் அன்றும் இன்றும்..

தமிழ்நாட்டில் முதல்வர்கள், முதல்வராக வருவதற்கு துடிப்பவர்கள் ஊழல் வழக்குகளில் சிறைக்குப் போகிறார்கள். அதற்காக வெட்கப் படுவது இல்லை, இது ஒருபுறம் ஆனால் கொள்கைக்காக, அடக்குமுறைகளை எதிர்த்து சிறை சென்ற தலைவர்கள் தமிழகத்தில் உண்டு. அதிலும் பெரியார் சிறை சென்ற வரலாறுகள் கைகால்விலங்குகளோடு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளே கடும் வேலை வாங்கப்பட்ட வரலாறுகளும் உண்டு. ஏனைய தலைவர்களோடு பெரியார், இதிலும் தனித்துவமாக நிற்கிறார், கொள்கைக்காக சிறைக்கு போவது கூட தியாகம் அல்ல என்கிறார் பெரியார். 1932ம்ஆண்டுசோவியத்ரஷ்யாவுக்குபயணம் சென்று திரும்பிய பெரியார் ‘குடிஅரசு’ ஏட்டில் ‘இன்றைய ஆட்சி’ ஏன் ஒழியவேண்டும் என்று எழுதியகட்டுரைக்காக,அவர்மீதுஅடக்குமுறை சட்டம் பாய்ந்தது. அந்தக் கட்டுரை ஏழை எளிய மக்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்காமல், பணக்காரர்களுக்கும், பார்ப்பன மேல் ஜாதிக்காரர்களுக்கு மட்டும், மக்களின் வரிப்பணத்தை விரயமாக்குகிறது என்ற கருத்தில் எழுதப்பட்ட கட்டுரை. பெரியாரும் குடிஅரசு பதிப்பாளர் என்ற முறையில் அவரது சகோதரி கண்ணம்மாளும் கைது செய்யப்பட்டனர். பிரிட்டிஷ் ஆட்சி மேற்கொண்ட அடக்குமுறைகள்...