இணையத்தில் கேள்விகளுக்கு கழகத் தலைவர் பதில் 02-04-2016 – நாம் தமிழர் கட்சி
நமது கழகத்தின் இணைய தளத்தில், கேள்வி பதில் பகுதியில் இந்த வாரம் வந்த கேள்விகளுக்கு கழகத் தலைவரின் பதில் தோழர் பகலவன் நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு படித்தீர்களா? படித்திருந்தால் அதை பற்றிய நிறை குறையை பற்றி பகிரவும் தோழர் கொளத்தூர் மணி நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு வரைவு எமக்குக் கிடைக்கவில்லை. கிடைத்ததும் தேவையெனில் எழுதுவோம். தோழர் பகலவன் ஆந்திரா, கர்நாடக மற்றும் கேரளா மாநிலத்தவர்கள் தங்களை திராவிடர் என்று அடையாள படுத்துவது இல்லை. நாம் மட்டும் ஏன் நம்மை திராவிடர்கள் என அடையாளப்படுத்த வேண்டும்? தோழர் கொளத்தூர் மணி ஆந்திர மாநிலம் சித்தூரில்தான் திராவிடப் பல்கலைக் கழகம் உள்ளது. அதுபோலவே கர்நாடக மாநிலம் மைசூரில்தான் திராவிட மொழியியல் ஆய்வு மையம் உள்ளது. மற்றொரு காரணம், திராவிடம் என்பது தமிழ் என்பதன் திரிந்த வடிவம்தான் …. தமிழ்> திரமிழ்>திரமிழ> திரமிட> திரவிட> திராவிட … என்று திரிந்தது என்று கூறுகிறோம். அவ்வாறிருக்க தனிமொழிப் பெருமிதத்தோடு விளங்கும் பிற திராவிட இனத்தவர் தங்கள்...