தலையங்கம் கேள்விக்குறியாகும் எதிர்காலம்!
தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியிருக்கிறது என்பதற்கு அண்மையில் தமிழ்நாடு தேர்வாணை யம் நடத்திய ‘குரூப்-4’ தேர்வே சரியான சாட்சி. 5,451 காலி இடங் களுக்கு தேர்வு எழுதியவர்கள் 15 இலட்சத்து 64 ஆயிரத்து, 471 பேர். 12ஆம் வகுப்புதான் கல்வித் தகுதி என்றாலும், பொறியியல் பட்டதாரிகள் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்றுள்ளனர். 11 மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்களுக்கு 2014இல் நடத்திய தேர்வில் 3000 பேர் தேர்வு எழுதினர். 2015இல் முதன்மை தேர்வு (மெயின் தேர்வு) நடந்து முடிந்து 15 மாதங்கள் ஓடிய பிறகும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. துணை ஆட்சியர், மாவட்ட காவல்துறை அதிகாரி போன்ற குரூப்-1 தேர்வுகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வில் பங்கேற்று தேர்ச்சிப் பெறக் கூடியவர்கள் குறைந்தது மூன்று முறை தேர்வு எழுதியவர் களாகவே இருக்கிறார்கள். பட்டப் படிப்பு முடித்தது முதல் இந்தத் தேர்வுக்காகவே தயாராகி வரும் மாணவர்களுக்கு இறுதி கட்டத்தில் வயதுத் தடை...