Tagged: குரங்கு மனிதன்

சேனல் எடமருகுவிடம் தோற்றோடிய பார்ப்பன பண்டிதர்

2012 மார்ச் 5ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது. மும்பை புற நகர் பகுதியான ‘இர்லா’வில் வேளாங்கண்ணி  மாதா தேவாலயம் ஒன்று இருக்கிறது. அதன் வாயிலில் ஏசு சிலுவையில் அறையப்படும் சிலை ஒன்று உண்டு. அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒரு பெண், அந்த சிலுவை சிலையில் கால் பகுதியிலிருந்து தண்ணீர் சொட்டு வதை பார்த்தார். உடனே கூட்டத்தைக்  கூட்டி சிலையின் காலடியில் தண்ணீர் வடிகிறது என் கூறினார். அந்தப் பெண் கிறிஸ்துவப் பெண் அல்ல. ஒவ்வொரு நாளும் கூட்டம் திரளத் தொடங்கி விட்டது. ‘ஏசு சிலையின்  அற்புதம்’ என்று பிரச்சாரம் கட்டவிழ்க்கப்பட்டது! (இதே போல் நாடு முழுதும் ஒருநாள் பிள்ளையார் சிலை பால் குடிப்பதாக ஒரு புரளி கிளப்பப்பட்டது. பின்னர் அறிவியல் வழியில் ‘அது அதிசயம் அல்ல’ என்று நிரூபிக்கப்பட்டது. (பால் குடித்த விநாயகர், அதை எப்போது சிறுநீராக வெளியேற்றினார் என்ற பகுத்தறிவாளர் கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.) ‘ஏசு சிலையின் காலடியில் தண்ணீர்  சொட்டுகிறது’...