‘ஆர்யபட்டரை’ வெறுத்து ஒதுக்கிய பார்ப்பனர்கள்
சேலம் மாநாட்டுச் சிந்தனை ட பார்ப்பனியத்தின் உயிர்நாடி, வேத மதத்தின் அடிப்படைக் கருத்தியல்கள், உபநிடதங்களின் உள்ளுறை, தர்ம சாத்திரங்களின் தகிடுதத்தங்கள் ஆகிய அனைத்தும் கீதையில் உள்ளடங்கியிருப்பதை உணர்ந்து கொண்ட பார்ப்பனர்கள், எதிரிகளை சிதறடிப்பதற்கான ஆயுதமாக கீதையைப் பயன்படுத்திக் கொண்டார்கள். ட கீதை – புரட்சிகரமாக தோற்றம் காட்டக்கூடிய வெற்று முழக்கங்களை மிக சாமர்த்தியமாக முன்னிறுத்துகிறது. எனவே கீதைக்கு விளக்க உரை எழுதியவர்களும், இந்த முழக்கங்களை முன்னிறுத்துவதையே கலாச் சாரமாக்கிக் கொண்டார்கள். பிறகு இந்துத்துவமே முழக்கங்களில் உயிர் வாழும் ஒரு இயக்கமாகி விட்டது. ட “கதம்பக் குவியலான கீதைத் தத்துவம், புதிது புதிதான விளக்கங்களை நுழைப்பதற்கு இடமளிக்கும் வகையில்தான் அமைந்துள்ளது. ஆனால் சமூகத் தடைகளைக் கடந்து புதுவழியில் செல்வதற்கு அது வழிகாட்ட வில்லை” என் கிறார் வரலாற்று ஆய்வாளர் கோசாம்பி. ட கீதையின் முரண்பாடுகளைப் போலவே – இந்துக்களின் பண்பு நலனும் சொல் ஒன்று, செயலொன்றாகியது. உயர்ந்த தத்துவங்களைப் பேசும் அறிவு ஜீவி...