Tagged: குப்தர்

மரபணு ஆராய்ச்சியில் வெளிவந்த உண்மை குப்தர் ஆட்சிக் காலத்திலிருந்து ஜாதி கலப்பு திருமணங்கள் தடைபடுத்தப்பட்டன

மரபணு ஆராய்ச்சியில் வெளிவந்த உண்மை குப்தர் ஆட்சிக் காலத்திலிருந்து ஜாதி கலப்பு திருமணங்கள் தடைபடுத்தப்பட்டன

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னதாக ஜாதிக் கலப்புத் தடுக்கப்பட்டு உயர்ஜாதியினரின் ஆதிக்கத் திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது என மரபணு தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் தேசிய பயோ மெடிக்கல் ஜெனோமிக்ஸ் நிறுவனம் நடத்திய ஆய்வு கூறுகிறது. இனக் குழுக்களாக இருந்த சமூகங்கள் எப்போது சாதி அடையாளம் உள்ளவையாக மாறின? சுமார் 70 தலைமுறைகளுக்கு முன்னதாக அதாவது 1500 ஆண்டுகளுக்கு முன்னதாக சாதிக் கலப்பு தடுக்கப் பட்டு ஒவ்வொரு ஜாதிக்குள்ளேயே திருமணம் மேற்கொள்ளப்பட்டு (அகமண முறை) ஜாதி அமைப்பு ஒருங்கிணைக்கப்பட்டு வலுப்பெற்றதாக மாறியது என இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாய்வுக்காக 20 இனங்களைச் சேர்ந்த பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த 367 தனி நபர்களின் மரபணுக்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. ஆய்வுக் கான மாதிரிகள் ஜாதிவாரியாகவும் மொழிவாரி யாகவும் நிலவியல் வேறுபாடுகளை கவனத்தில் கொண்டும் எடுத்துக் கொள்ளப்பட்டன. குஜராத், மணிப்பூர், மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த பார்ப்பனர்களும் மராத்தியர்களும் திராவிடச் சமூகங்களைச் சேர்ந்த பள்ளர், இருளர்...