தலையங்கம் மோடியை அம்பலமாக்கும் தீர்ப்பு
குஜராத்தில் மோடி ஆட்சியில் 2002 ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமியர் இனப் படுகொலையில் ‘நரோடா பாட்டியா’ என்ற அகமதாபாத் புறநகர் பகுதியில் 97 இஸ்லாமியர்கள் உயிருடன் நெருப்பில் போட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மை யோர் பெண்களும் குழந்தைகளும் ஆவர். இதில் உண்மையான குற்றவாளிகளை மறைத்து கண்துடைப்புக்காக வழக்குகளைப் பதிவு செய்தது மோடி ஆட்சி. உச்சநீதிமன்றம் தலையிட்டு, முன்னாள் மத்திய புலனாய்வுத் துறை இயக்குநர் ஆர்.கே. ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு 32 குற்றவாளிகளை அடையாளம் கண்டது. அவர்கள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த அகமதாபாத் சிறப்பு விரைவு நீதிமன்ற நீதிபதி, ஆகஸ்ட் 31 ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார். ஜோட்ஸ்னா யாக்னிக் என்ற பெண் நீதிபதி வழங்கியுள்ள தீர்ப்பு, பல்வேறு வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தப் படுகொலையை முன்னின்று நடத்திய மோடி அமைச்சரவையில் இடம் பெற்றவரும், அவருக்கு மிக நெருக்கமானவர்...