‘கீதை’யின் வஞ்சகப் பின்னணி!
சேலம் மாநாட்டுச் சிந்தனை ட கீதையின் காலம் குறித்தும் – அது ஒருவரால் தான் இயற்றப்பட்டது என்பது குறித்தும் – குழப்பமான கருத்துகள் நிலவுகின்றன. ட “சாதியக் கட்டமைப்பின் இறுக்கம் நொறுங்கிக் கொண்டிருந்த கால கட்டத்தில் மீண்டும் சாதியக் கட்டுமானத்தை வலிமைப் படுத்தவே கீதை வந்தது என்கிறார், ஆய்வாளர் டி.பி.ஹில். ட பாரதப் போரில் அர்ச்சுணனுக்கு, தேரோட்டுபவனாக இருந்த கிருஷ்ணன், அர்ச்சுனனுக்கு கூறிய அறிவுரைதான் கீதை என்ற கருத்தை ஏற்க இயலாது. போர்க் களத்தில் போர்ச் சூழல் பற்றிய உரையாடல்கள் தான் நடந்திருக்க முடியுமே தவிர வேறு பல தத்துவங்கள் பற்றிப் பேச, போர்க் களம் உரிய இடமாக இருக்காது. எனவே கீதையின் உள்ளடக்கம், பிற்காலத்தில் விரிவுபடுத்தி எழுதப் பட்டது என்பது பல ஆய்வாளர் களின் கருத்து. ஆனால் பகவத்கீதை இறைவனால் ‘அருளப்பட்டது’ என்று பார்ப்பனர்கள் கூறு கிறார்கள். ட கீதை – ஒரு வரலாற்று நிகழ்வு என்பது சந்தேகத்துக்குரியது என்கிறார்...