Tagged: கி.வீரமணி

தி.க. தலைவரை தாக்க முயற்சி: கழகம் கண்டனம்

தி.க. தலைவரை தாக்க முயற்சி: கழகம் கண்டனம்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களை விருத்தாசலத்தில் ஜாதி மத வெறி சக்திகள் தாக்க முயன்றதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. தாக்குதலைக் கண்டித்து சென்னையில் கழக சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. பார்ப்பனிய சக்திகள், சில ஜாதி வெறியர்களை சேர்த்துக் கொண்டு மிரட்டிப் பார்க்க வேண்டாம். பெரியார் இயக்கங்கள் பல்வேறு பெயரில் இயங்கினாலும் பெரியார்  கொள்கை பரப்புதலுக்கு தடை என்று வந்தால் அதை சந்திக்க களமிறங்கும். இதை பார்ப்பன சக்திகள் புரிந்து கொள்ளட்டும்! பெரியார் முழக்கம் 10102013 இதழ்

திராவிடர் கழகம் வரலாற்றை திரிக்க வேண்டாம்!

திராவிடர் கழகம் வரலாற்றை திரிக்க வேண்டாம்!

பெரியார் – தமிழ்நாடு தனி நாடாக வேண்டும் என்று கூறியது குறித்து வாசகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தி.க. தலைவர் கி.வீரமணி ‘உண்மை’ இதழில் (ஜன.1-15) கீழ்க்கண்ட பதிலை அளித்துள்ளார். “சமூக இழிவு ஒழிப்பு மாநாடுதான் அவர் கடைசியாக நடத்தியது; பேசியது. அதற்காக விடுத்த அறிக்கையில் ‘நானே பிரிவினை கேட்கவில்லையே!’ என்று அறிக்கையை விடுத்தார். அது விடுதலை நாளிதழில் வெளி வந்துள்ளது. ‘விடுதலை’க்கான தேவை அவசியம் வேறு – கழகம் விடுதலை கேட்டது என்ற நிலை வேறு’ என்று பதிலளித்துள்ளார். பெரியார் தமிழ்நாடு தனிநாடாக பிரிய வேண்டும் என்று வலியுறுத்தியது உண்மை. தி.க. தலைவர், அதை ஏற்கிறாரா? இல்லையா என்பது, அவரது கொள்கை. அதற்காக பெரியார் கருத்தை மறைக்க முயல்வது வரலாற்றுத் துரோகம். தி.க. தலைவர் கூறுவதுபோல் பெரியார் கடைசியாக பேசியது சமூக இழிவு ஒழிப்பு மாநாடு அல்ல. பெரியார் சமூக இழிவு ஒழிப்பு மாநாடு நடத்தியது 1973 டிசம்பர் 8,...

வினா-விடை!

வினா-விடை!

சமூகத்தில் நான் பிற்படுத்தப்பட்ட ஜாதியி லிருந்து வந்தவன். இதன் காரணமாக எனது வார்த்தையை தரம் தாழ்ந்த அரசியல் என்று கூறுகிறார்கள்.      – மோடி ஆகவே, சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட ஜாதி, தாழ்த்தப்பட்ட ஜாதிகளை உருவாக்கிய இந்து மதத்தை வெறுத்து ஒதுக்கி மோடி தனது சுயமரி யாதையைக் காப்பாற்ற உறுதி ஏற்பாராக! உச்சநீதிமன்றம் ‘ஜல்லிக் கட்டு’ தடை செய் துள்ளது குறித்து – கருத்து கூற விரும்பவில்லை.                 – கி.வீரமணி நியாயமான பேச்சு. அது குறித்து காளைகள் தானே கருத்து கூற வேண்டும். அவைகளின் கருத்துரிமையை நாம் பறிப்பது நியாயம் அல்ல. உடுப்பி கிருஷ்ண மடத்தில் ‘பிராமணர்’களுக்கு தனி இடத்தில் சாப்பாடும் போடும் ‘பங்கி பேதா’ முறையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்.  – செய்தி ‘ஓசி’ சாப்பாடுன்னாலும் ‘ஆச்சாரத்தை’ விட்டுடப்படாது, ஓய்! புகாரி, அஞ்சப்பர், பொன்னுசாமி ஓட்டல்களிலும் ‘பிராமணர்’ களுக்கு தனி இடம் கேட்டு ‘குல தர்மத்தை’க் காப்பாத்துங்கோ! அண்ணா உயிரியல்...

தலையங்கம்: பெரியார் இயக்கங்களின் கூட்டுச் செயல்பாட்டை வரவேற்கிறோம்!

தலையங்கம்: பெரியார் இயக்கங்களின் கூட்டுச் செயல்பாட்டை வரவேற்கிறோம்!

மறைந்த பெரியார் சாக்ரடீஸ் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் நடந்தபோது (30.5.2014) கவிஞர் அறிவுமதி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களிடம் ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். பெரியார் கொள்கைகளுக்கு நெருக்கடி உருவாகியுள்ள அரசியல் சூழலில், பெரியார் இயக்கங்கள், தங்களுக்குள் இணைந்து செயல்படவேண்டும் என்றும், அதற்கான முன்முயற்சியை திராவிடர் கழகத் தலைவரே எடுக்க வேண்டும் என்பதே கவிஞர் அறிவுமதியின் கோரிக்கை. தொடர்ந்து பேசிய நடிகர் சத்தியராஜ் அவர்களும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் தமது உரையில் பேசியதை ‘விடுதலை’ நாளேடு கீழ்க்கண்டவாறு பதிவு செய்திருக்கிறது. “இங்கே கவிஞர் அறிவுமதி அவர்களும் நமது இனமுரசு சத்யராஜ் அவர்களும் ஒன்றைக் குறிப்பிட்டார்கள். அது பற்றி நான் கருத்து சொல்லவில்லை என்றால், என்ன நாம் எடுத்து வைத்த கோரிக்கைக்கு ஆசிரியர் (கி.வீரமணி) பதில் சொல்லாமல் போய்விட்டாரே என்று கருதிட இடம் கொடுக்கக் கூடாதல்லவா? பெரியார்...

தலையங்கம் : தடை போட வேண்டுமாம்!

தலையங்கம் : தடை போட வேண்டுமாம்!

மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஒரு விசித்திர வழக்கை சந்தித்திருக்கிறது. ‘பிராமணர்’களை எதிர்த்தும் அவதூறூகவும் பேசி வரும் தி.க. தலைவர் கி.வீரமணி, தந்தை பெரியார் தி.க. பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, அவர்கள் “பிராமணருக்கு” எதிராகப் பேச தடைவிதிக்க உத்தரவிடவேண்டும் என்பது வழக்கு. வழக்கைத் தொடர்ந்தவர் சிவகாசியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற வழக்கறிஞர். விசாரித்த நீதிபதிகள் வி.இராம சுப்பிரமணியன், வி.எம். வேலுமணி மனுவை தள்ளுபடி செய்து விட்டனர். “விமர்சனம் என்பது கருத்து சுதந்திரத்தின் ஒரு பகுதி கருத்துரிமைக்கு அரசியல் சட்டத்தில் இடமிருக்கிறது. சரியான விமர்சனங்களை வரவேற்க வேண்டும். விமர்சனம் முறையற்றதாக நியாயமற்றதாக இருக்குமானால், ஒன்று அதை புறக்கணிக்கலாம். மற்றொன்று சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரலாம். விமர்சனம் எல்லை மீறினால் புத்தர் காட்டிய வழியில் அமைதி காக்கலாம். இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். சகமனிதர்களை தனது வைப்பாட்டி மக்கள், சூத்திரர்கள்...