Tagged: கிந்தனார்

‘அன்னக் காவடி’ ஆனாலும்…

பகுத்தறிவு சிந்தனைகளை திரைப்படங்கள் வழியாக பரப்புவதை தனது இலட்சியமாகக் கொண்டு செயல்பட்டவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். தன்னுடைய பணத்தையும் செல்வத்தையும் மக்களுக்கு வாரி வாரி வழங்கிய வள்ளல். பெரியார், கலைவாணர் தொண்டு குறித்து இவ்வாறு எழுதினார்: “இனி என்.எஸ். கிருஷ்ணன் செத்தாலும் சரி, அவர் பணம் காசெல்லாம் நழுவி ‘அன்னக் காவடி கிருஷ்ணன்’ ஆனாலும் சரி, நாடகப் புரட்சி உலகைப் பற்றி சரித்திரம் எழுதப்பட்டால், அட்டைப் பக்கத்தில் கிருஷ்ணன் படம் போடாவிட்டால், அச்சரித்திரமே தீண்டப்படாததாக ஆகிவிடும்.                           (‘குடிஅரசு’ 11.11.1944) கலைவாணர், பெரியார் பற்றி இவ்வாறு கூறினார்: “நம் நாட்டைப் பொறுத்தவரையில் செயற்கரிய செய்த பெரியவர்கள் பலர். அவர்களின் வரிசையிலே இடம் பெறத்தக்க ஒரு பெரியார் நமது  தலைமுறையில் வாழ்ந்து கொண்டிருப்பது குறித்து நாம் பெருமை கொள்ளலாம். சிந்திப்பதே பாவம் – என்று எளியோரை வலியோர் அர்த்தமில்லாமல் வேத, புராண, இதிகாசங்கள் மூலமாக அடக்கி வருகின்றனர் என்று கருதப்படும் சூழ்ச்சியை  இரகசியமாகவோ,...