Tagged: காவல்துறை தாக்குதல்

திலீபன் மகேந்திரன் கையை முறித்த காவல்துறைக்கு கழகம் கடும் கண்டனம்

இந்திய தேசியக் கொடியை எரிக்கும் படத்தை தனது முகநூலில் வெளியிட்ட தற்காக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த தோழர் திலிபன் மகேந்திரனை காவல்துறை கைது செய்து, அவரது கையையும் மூன்று விரல்களையும் இரும்புக் கம்பியால் உடைத்திருக்கிறது. கொடி எரிப்பு அவமதிப்பு என்றால், அதற்கான சட்டப் பிரிவுகளில் வழக்கு தொடரட் டும். ஆனால், காவல்துறை காட்டு மிராண்டித்தனமாக கையை உடைக் கும் அளவுக்கு போயிருக்கிறது. திராவிடர் விடுதலைக் கழகம், காவல் துறையின் இந்த செயலை வன்மை யாகக் கண்டிக்கிறது. கடந்த 6ஆம் தேதி மயிலாடுதுறையில் “ஜாதிக் கொரு சுடுகாடு; இது சுதந்திர நாடா?” என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பொதுக் கூட்டத்தில் கழகப் பொதுச் செய லாளர் விடுதலை இராசேந்திரன் இந்த செயலுக்காக காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துப் பேசினார். சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தின் இந்த வன்முறை வெறியைக் கண்டித்து, கடந்த 8ஆம் தேதி காவல் நிலையத்தை...

வாழ்வுரிமைக் கட்சியினர் மீது தாக்குதல்: கழகம் கண்டனம்

வாழ்வுரிமைக் கட்சியினர் மீது தாக்குதல்: கழகம் கண்டனம்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை: தாமிரபரணி ஆற்றின் நீரை உறிஞ்சி விற்பனை செய்யும் பன்னாட்டு குளிர்பான ஆலையை மூடக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடத்தப்பட்ட காவல்துறையினரின் தாக்குதலில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் உள்பட பலர் கொடுங்காயம் அடைந்துள்ளனர். காவல்துறை யின் இந்த ஜனநாயக விரோதப் போக்கை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. பொதுவாக பொதுமக்கள் குடிநீர் பிரச்சனைக் காகவோ, போக்குவரத்து வசதிகளுக்காகவோ, சுகாதாரச் சீர்கேடுகளுக்காகவோ, குடிமைப் பொருட் களுக்காகவோ போராட்டம் நடத்தினால் அதற்குரிய அதிகாரிகள் தான் வந்து பேசி சமரசம் செய்வார்கள். ஆனால் கடந்த 10-15 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களின் எந்தவிதமான போராட்டங்களாக இருந்தாலும் காவல்துறை மட்டுமே வந்து மக்களிடம் பேசுவதும் போராட்டக்காரர்கள் மீது வன்முறையினை நிகழ்த்து வதும் தொடர்கதையாகி வருகிறது. இதை தமிழகத்தை ஆளும்கட்சிகள் கண்டும் காணாமல் இருப்பதால் காவல்துறையின் அத்துமீறல் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழக மக்களின் உரிமைக்காக தமிழகத்தின்...