உயிர் தோன்றியது கடவுள் சக்தியால் அல்ல!
உலகப் புகழ் பெற்ற தனது மூலதனம் நூலை “உங்களுடைய தீவிர அபிமானி” என்று கையெழுத் திட்டு கார்ல் மார்க்ஸ் ஒருவருக்கு அனுப்பி வைத்தார். அந்த நபர் “பரிணாமவியலின் தந்தை” சார்லஸ் டார்வின். டார்வின் எழுதிய “உயிரினங்களின் தோற்றம்” என்ற நூலைப் படித்துவிட்டு, வரலாற்றுப் பொருள் முதல் வாதத்துக்கு அந்த நூல் அடிப்படையாக இருந்ததாக மார்க்ஸ் குறிப்பிட்டுள்ளார். டார்வின் கண்டறிதல் அந்த அளவுக்குத் தாக்கம் செலுத்தியிருந்தது. கடவுளே மனித இனத்தைத் தோற்றுவித்ததாக நம்பப்பட்டு வந்த நிலையில், “இல்லை, அனைத்து உயிரினங்களும் இயற்கை நடைமுறையின் ஒரு பகுதியாகப் பரிணாம வளர்ச்சியில் உருவானவை” என்பதை அறிவியல் ஆதாரங்களுடன் டார்வின் நிறுவினார். அதற்காக இன்றுவரை தூற்றப்பட்டு வருகிறார். அறிவியல் உலகின் இரண்டாவது புரட்சி என்று டார்வின் பரிணாம வியல் தத்துவத்தைக் கூறலாம். பூவுலகில் உயிரும் மனித இனமும் எங்கிருந்து வந்தன என்ற அடிப் படைக் கேள்விக்கான விடையை, பரிணாம வளர்ச்சிக் கொள்கை சொல்கிறது. சரி, பரிணாம வளர்ச்சிக்...