Tagged: கார்ப்பரேட்

‘பார்ப்பனக் கட்டுப்பாட்டில்’ மத்திய அமைச்சகங்கள்

‘பார்ப்பனக் கட்டுப்பாட்டில்’ மத்திய அமைச்சகங்கள்

தனியார் துறை இடஒதுக்கீடு; முஸ்லீம்களுக்கு தனி ஒதுக்கீடு என்று தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் சமூக நீதி பேசியது. ஆனால், டெல்லி அதிகார மய்யங்களில் சமூக நீதியை முற்றிலுமாக புறக்கணித்தது என்ற உண்மை வெளி வந்துள்ளது. டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் முதல் நிலை ‘ஏ’ குரூப் அதிகாரிகள் பதவியில் ஒரு தாழ்த்தப்பட்டவரோ, பழங்குடியினரோ இல்லை. 2013 ஜனவரி நிலவரப்படி இந்தப் பதவிகளில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் இரண்டே பேர் மட்டுமே! ஏனைய 49 பதவிகளில் இருப்பவர்கள் அனைவருமே பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதியினர்தான். அதேபோல் குடியரசு துணைத் தலைவர் அன்சாரி அலுவலகத்தில் ஒரு தலித் அதிகாரிகூட இல்லை. குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் முதல் நிலை அதிகாரியாக ஒரு பிற்படுத்தப்பட்டவர்கூட இல்லை. தலித் அதிகாரிகள் 3 பேரும் பழங்குடி சமூகத்தைச் சார்ந்த ஒருவர் மட்டுமே உள்ளனர். எஞ்சிய 27 உயர்நிலை அதிகாரிகள் பார்ப்பனர் மற்றும் உயர்சாதியினர் தான்! (இடஒதுக்கீடுப் பிரிவில் இடம் பெறாதவர்கள்) திட்டக் குழுவிலும் சமூகநீதிக்கு...

ராஜபக்சே வாழ்த்து; சாமியார்கள் ஆசி; கார்ப்பரேட் முதலாளிகள் மகிழ்ச்சி!

ராஜபக்சே வாழ்த்து; சாமியார்கள் ஆசி; கார்ப்பரேட் முதலாளிகள் மகிழ்ச்சி!

ராஜபக்சே வாழ்த்து; சாமியார்கள் ஆசி; கார்ப்பரேட் முதலாளிகள் மகிழ்ச்சி!:- 45 அமைச்சர்களுடன் (23 பேர் கேபினட் அமைச்சர்கள்; 22 இணை அமைச்சர்கள்) மோடி பிரதமராக மே 26 அன்று பதவி ஏற்றார். தமிழகத்தைச் சார்ந்த ஒருவர் கூட  ‘கேபினட்’ அமைச்சராகவில்லை. வெற்றி பெற்ற ஒரே பா.ஜ.க. வேட்பாளர் பொன். இராதாகிருஷ்ணன் இணை அமைச்சராகியுள்ளார்.  திருச்சியில் படித்து, டெல்லியில் தங்கிவிட்நிர்மலா சீதாராமன் (பார்ப்பனர்) தேர்தலில் போட்டியிடாமலேயே இணை அமைச்சராகி விட்டார்.  சுஷ்மா சுவராஜ், மேனகா, நஜிமா ஹெப்துல்லா, ஹர்ஸ்மிரத் கவுர் பதல், உமாபாரதி, ஸ்மிருதி ராணி என 6 பெண்கள் கேபினட் அமைச்சர்களாகி யுள்ளனர்; மேலே குறிப்பிட்பெண் இணை அமைச்சர்.  பா.ஜ.க. வைச் சார்ந்த அன்புமணிக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் இல்லாமலேயே இந்தூரில் மருத்துவக் கல்லூரி தொடங்க, அமைச்சராக இருந்தபோது அன்புமணி அனுமதித்ததற்காக அவர் மீது சி.பி.அய். வழக்கு உள்ளது. அதன் காரணமாகவே பதவி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது....