‘ஆனந்த விகடனு’க்கு பெரியார் பேட்டி: “ஆட்சி அமைக்க என்னை அழைத்தார்கள்! ”
மறைந்த பத்திரிகையாளர் சாவி, தந்தை பெரியாரை திருச்சி பெரியார் மாளிகையில் சந்தித்து எடுத்த இந்தப் பேட்டி, 4.4.1965 ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளி வந்துள்ளது. அப்பேட்டியை மீண்டும் 29.1.2014இல் அந்த ஏடு மறு வெளியீடு செய்துள்ளது. பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய அந்த சந்திப்பை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. (சென்ற இதழ் தொடர்ச்சி) “ராஜாஜி உங்களை ஜெயில்ல போட்டாரே, அது எப்போ?” “முப்பத்தேழுலே நடந்த எலக்ஷன்ல ஜஸ்டிஸ் கட்சி தோத்தது. அப்ப அந்தக் கட்சிக்கு பொப்பிலி ராஜாதான் தலைவர். பொப்பிலி, பெத்தாபுரம் எல்லாரும் தோத்துப் போனாங்க. காங்கிரஸ் ஜெயிச்சுட்டுது. ராஜாஜி, மந்தரிசபை அமைச்சாரு. அப்பத்தான் கட்டாய இந்தியைக் கொண்டு வந்தாங்க. நான் எதிர்த்தேன். புரோகிபிஷனைக் காரணம் காட்டி விற்பனை வரிபோட்டாங்க. என்னை ஜெயில்ல போட்டாங்க. ஜஸ்டிஸ் கட்சி மெம்பர்களைப் பழிவாங்க ஆரம்பிச்சாங்க. நான் ஜெயிலுக்குள்ளே இருக்கிறபோதே பொப்பிலி எல்லாம் சேர்ந்து, என்னை ஐஸ்டிஸ் கட்சித் தலைவனாக்கிட்டாங்க.” “அப்புறம் எப்ப...