Tagged: காமன்வெல்த் மாநாடு

தலையங்கம்: கமலேஷ் சர்மா நடத்தும் காமன்வெல்த் மாநாடு

தலையங்கம்: கமலேஷ் சர்மா நடத்தும் காமன்வெல்த் மாநாடு

கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்று, இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைப் பேச வேண்டுமே தவிர, அதைப் புறக்கணிப்பது சரியாகாது என்று ஒரு வாதம் முன் வைக்கப்படுகிறது. முள்ளி வாய்க்கால் இனப் படுகொலைக்குப் பிறகு இலங்கை அரசு, தனக்குத் தானே நியமித்துக் கொண்ட ‘கற்ற பாடம்; சமாதானப்படுத்தல்’ என்ற விசாரணை ஆணையம் – ஆண்டுகள் ஓடியும் எந்த விசாரணையையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. 13 ஆவது சட்டத்திருத்தத்தில் மாகாண கவுன்சில்களுக்கு வழங்கப்பட்டிருந்த நிலஉரிமை மற்றும் காவல்துறையை அமைத்துக் கொள்ளும் உரிமைகளையும் நீதிமன்றம் வழியாக இலங்கை அரசு பறித்துக் கொண்டது. வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பும் முறியடிக்கப்பட்டுவிட்டது. சிங்களர்களின் இன வெறியை திருப்திப்படுத்துவதே இலட்சியமாகக் கொண்டு செயல்படும் ஒரு ஆட்சியிடம் இனியும் பேசுவதற்கு என்ன இருக்கிறது? வடக்கு மாகாணத்தின் முதல்வராக தமிழர்களால் தேர்வு செய்யப்பட்ட விக்னேசுவரன், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என்று கூறும்போது, தமிழகத்தில் மட்டும் ஈழ ஆதரவாளர்கள்...

தலையங்கம்: நேர்மையற்ற வாதங்கள்!

தலையங்கம்: நேர்மையற்ற வாதங்கள்!

இலங்கையில் நடைபெறும் ‘காமன்வெல்த்’ நாடுகளின் மாநாட்டுக்கு இந்தியா சென்று, அந்த அரசின் மனித உரிமை மீறல்களை எடுத்துச் சொல்ல வேண்டும்; அதைப் புறக்கணிப்பது தவறு என்று ஒரு வாதம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. வெளியுறவுத் துறை அதிகார வட்டாரங்கள் இதில் மிகவும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த வாதங்களில் நேர்மையோ, உண்மையோ இல்லை. காமன்வெல்த் நாடுகளின் மாநாடு இலங்கை மனித உரிமை மீறல்கள் பற்றியோ, போர்க் குற்றங்கள் பற்றியோ பேசுவதற்காகவோ கூடவில்லை. காமன்வெல்த் நாடுகளின் பெரும் தொழில் நிறுவனங்கள் இலங்கையில் தொழில் வணிக முதலீடுகளை செய்வது குறித்து விவாதிப்பதுதான் இந்த மாநாட்டின் முதன்மையான நோக்கம். நாட்டின் தiலைவர்கள் சந்திப்பைவிட அதைத் தொடர்ந்து நடக்கும் தொழிலதிபர்களின் சந்திப்புதான் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த மாநாட்டை இந்தியா புறக்கணிப்பதால் இந்தியாவுக்கு எந்தப் பின்னடைவும் ஏற்பட்டுவிடப் போவதும் இல்லை. போர்க் குற்றம் இனப்படுகொலை குற்றங்களை சுமந்து நிற்கும் ஒரு நாட்டில் காமன்வெல்த் தலைவர்கள் கூடலாமா என்பது ஒரு...