காஞ்சி கோயிலில் ‘பார்ப்பனர்’ திணிக்கும் தீண்டாமை
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் என்றாலே சங்கர்ராமன் என்ற அர்ச்சகர் வெட்டிக் கொலை செய்யப் பட்டது நினைவுக்கு வரும். சங்கர்ராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காஞ்சி ஜெயேந்திரன் உள்ளிட்ட அனைவரும் விடுதலையாகிவிட்டார்கள். ஆனால், சங்கர்ராமனை கொலை செய்தது யார் என்பதற்கு விடை கிடைக்கவில்லை. தன் கண் முன்னே தனது பக்தன் வெட்டி வீழ்த்தி இரத்த வெள்ளத்தில் சாய்ந்ததை நேரில் பார்த்துக் கொண்டிருந்த “வரதராஜப் பெருமாளும்” அப்படியே “கல்லு”போலவே இருக்கிறார். அதே வரதராஜப் பெருமாள் கோயிலுக்குள் இப்போது பார்ப்பனர் நடத்தும் ‘தீண்டாமை’ வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்தக் கோயிலுக்குள் ‘மாமுனிவர்’ வைணவ கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலுக்குள் உள்பிரகாரத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அய்யங்கார் பார்ப்பனர்களை மட்டுமே அங்கே உட்கார வைத்து, அவர்களை வழிபடுவதுபோல் ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ பாட அனுமதிக்கப்படுகிறது. பார்ப்பனரல்லாத வைணவர்கள் கோயில் உள்புற வளாகத் துக்குள்ளேயே அனுமதிக்கப்படுவது இல்லை. கோயில் வளாகத்துக்குள்ளேயே பார்ப்பனரல்லாதவர்கள் அனுமதிக்கப் படாததை எதிர்த்து சில...