Tagged: காசி யாத்திரை

பார்ப்பனர் பிழைப்புக்கு வந்த ‘காசி யாத்திரை’

பார்ப்பனர் பிழைப்புக்கு வந்த ‘காசி யாத்திரை’

தமிழர்கள் வாழ்க்கையில் பார்ப் பனர்கள் சமஸ்கிருத சடங்குகளைப் புகுத்துவதற்கு மேற்கொண்ட சூழ்ச்சிகளை ஆட்சி மொழிக் காவலர் கீ. இராமலிங்கனார் அம்பலப்படுத்து கிறார். அவரது நூலிலிருந்து: ஒரு நானூறு ஆண்டுகளுக்கு முன் விசயநகர மன்னர், தமிழ்நாட்டில் புகுந்து ஆளத் தொடங்கினர். அவர் களுக்கு வடமொழியிற் பற்று மிகுந் திருந்ததால் தமிழ் நாட்டவர் சடங்குகள் அனைத்தையும் அம்மொழியிலேயே நிகழ்த்தினால் நல்லது என்று நம்பினர். அதனால், ஆயிரக்கணக்கான ‘புரோகி தர்’களை ஆந்திர நாட்டிலிருந்து இறக்குமதி செய்து தமிழ் நாடெங்கணும் ஊருக்கு ஒருவராய்க் குடியேறவிட்டனர். அவர் களுக்கு வேண்டிய வீட்டு வசதி, வாழ்க்கை வசதி களையெல்லாம் செய்துதந்து, ஒவ்வொருவருக்கும் சடங்கு செய்து வைக்கக்கூடிய எல்லைகளையும் வகுத்துத் தந்தனர்; குறிப்பிட்ட எல்லைக்குள் நிகழும் சடங்குகள் அவ்வளவையும் ஒரு புரோகிதரே நடத்தி வைக்கும் தனி உரிமையையும் வழங்கினர். இப் புரோகிதர் குடியேறிய பிறகே, தமிழர் வீட்டுச் சடங்குகள் அனைத்தும் இப் புரோகிதர்களால் வடமொழியில் நடத்தி வைக்கப் பெறலாயின. சிலப்பதிகாரத்தில் காணப்படும்...