கழக வளர்ச்சி-கழக ஏடு குறித்து விவாதம்: கோவை மண்டல கழக கலந்துரையாடல் முடிவுகள்
21-03-2014 வெள்ளிக்கிழமை அன்று காலை 11-00 மணியளவில், பொள்ளாச்சி ‘பர்வானா இல்லத்”தில் (வங்கி பணியாளர்கள் சங்க கட்டிடம்) கோவை மண்டல கழக கலந்துரையாடல் கூட்டம் மண்டல அமைப்புச் செயலாளர் பல்லடம் விஜயன் தலைமையில் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் கடவுள் மறுப்பும், பொள்ளாச்சி விஜயராகவன் ஆத்மா மறுப்பும் கூற, கோவை மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக பொள்ளாச்சி மாவட்டம் என தனியாக பிரித்தல், மாவட்ட அமைப்புகளை புதுப்பித்தல், பயிற்சி வகுப்புகள் நடத்துதல் உள்ளிட்ட கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து பல்லடம் விஜயன் உரையாற்றி துவக்கி வைத்தார். தலைமை சொல்லும் வேலைகளை மட்டும் செய்தால் போதாது; கிராமப்புற பிரச்சாரம் உள்ளிட்ட பல வேலைகளை நாமே முன்னெடுக்க வேண்டும் என்று செயலவைத் தலைவர் துரைசாமி வலியுறுத்தினார். உயர்கல்வி நிலையங்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு எதிராகவும், ஜோதிடக் கல்விக்கு எதிராகவும் போராட வேண்டிய அவசியம் குறித்து வழக்குரைஞர் பன்னீர்செல்வம் பேசினார். தலைமைக் கழகம் சொல்லும் அனைத்து பணிகளுக்கும் முழுமையான...