Tagged: கள்ளழகரின் கதை

கள்ளழகரின் கதை

கள்ளழகரின் கதை

மதுரையில் ஆண்டுதோறும் நடக்கும் சித்திரை திருவிழா குறித்து ஏடுகள் வெளியிடும் செய்திகள், கடவுள் நம்பிக்கை மோசடிகளுக்கு ஒரு சிறந்த உதாரணம். இந்தத் திருவிழாவுக்காக மட்டுமே வைகை ஆற்றில் தண்ணீர் 2 நாள் மட்டும் திறந்து விடப்படு கிறது. அதிகாலையில் கள்ளழகர் ‘திருமஞ்சனம்’, அதாவது திருமணம் செய்து கொள்கிறார். ஒவ்வொரு ஆண்டும் இந்த கூத்து.  அழகர் தங்கப் பல்லக்கில் வந்தார்; பிறகு தங்கக் குதிரைக்கு தாவினார்; தனது பக்தை ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை சூடிக் கொண்டார்; பிறகு பச்சைப் பட்டாடை உடுத்திக் கொண்டார்; அதன் பிறகு ஆற்றில் இறங்கினார் – இப்படி ஏடுகள் செய்தி வெளியிடுகின்றன. பக்தர்கள் எல்லாவற்றையும் நேரில் பார்த்துக் கொண்டுதான் இருக் கிறார்கள். உண்மையிலேயே அழகர் தானாக பல்லக்கில் அமர்ந்தாரா? தானாக குதிரைக்குத் தாவினாரா? தானாக பச்சை பட்டாடை உடுத்திக் கொண்டாரா? அனைத்தையும் செய்வது அர்ச்சகப் பார்ப்பனர்கள்தான்! ஆனாலும் இப்படி ஒரு கற்பனையை கட்டவிழ்த்து விடுகிறார்கள். அழகர் ஆற்றில்...