Tagged: கல்யாணராமன்

கொலை மிரட்டல்: பா.ஜ.க. கல்யாணராமன் மீது கழகம் காவல்துறையில் புகார்

கொலை மிரட்டல்: பா.ஜ.க. கல்யாணராமன் மீது கழகம் காவல்துறையில் புகார்

பா.ஜ.க.வில் பொறுப்பாளராக இருக்கும் கல்யாணராமன் என்பவர் தனது முகநூலில் தொடர்ந்து வன்முறையை தூண்டி விட்டும், கொலை மிரட்டல் விடுத்தும் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இது குறித்து திராவிடர் விடுதலைக் கழக சார்பில் தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன் மற்றும் கழகத்தினர், மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த 10.2.2016 பகல் 11 மணியளவில் எழுத்துபூர்வ புகார் ஒன்றை அளித்தனர். தேசியக் கொடியை எரித்து முகநூலில் படம் வெளி யிட்டதாகக் கூறி மகேந்திரன் திலீபன் என்ற இளைஞரின் கையை காவல்துறை உடைத்தது போல், கொளத்தூர் மணி கும்பலுக்கும் சீமானுக்கும் நடக்கும் என்று மிரட்டலுடன் அந்த நபர் பதிவிட்டிருந்ததையும் நகல் எடுத்து புகார் மனுவில் தோழர்கள் இணைத்திருந்தனர். பெரியார் முழக்கம் 18022016 இதழ்